மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 2 நாடாளுமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெறுகிறது. இந்த 2 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஜக ஒன்றிலும் காங்கிரஸ் ஒன்றிலும் முன்னிலை வகிக்கிறது. சிவசேனா பின்னடைவை சந்தித்துள்ளது. மஹராஷ்டிராவில் உள்ள பல்ஹார், பந்த்ரா கோந்தியா ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெறுகிறது. இந்தியா முழுக்க பல்வேறு தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.