முதலாளி படம் மூலம் இயக்குனர் ஆனவர் முக்தா சீனிவாசன். எஸ்.எஸ். ராஜேந்திரன் நடிப்பில் 1957ம் ஆண்டு வெளியான முதலாளி படம் தேசிய விருது பெற்றது. சுமார் 60 ஆண்டுகள் திரையுலகில் இருந்த அவர் பாஞ்சாலி, நினைவில் நின்றவள், சூர்யகாந்தி, பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடித்த நாயகன் படத்தை தயாரித்தவர் முக்தா சீனிவாசன். நாகேஷை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த அவர் அரசியலிலும் இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்த சீனிவாசன் பின்னர் ஜி.கே. மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸில் சேர்நதார். பொதுச் செயலாளராக இருந்த அவர் 1999ம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தென் சென்னை பகுதியில் போட்டியிட்டு மூன்றாம் இடத்தை பிடித்தார். தி.நகரில் உள்ள பாஜக தலைமைச் செயலக கட்டிடம் ஒரு காலத்தில் சீனிவாசனுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.