தூத்துக்குடி கலவரத்தில் காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்த குடும்பத்தினரை சந்திக்க சென்ற துணை முதல்வர் என் கணவரும் கச்சேரிக்கு செல்வது போல் சென்றுள்ளதாக முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்து முடிந்த உடனே அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டிய அமைச்சர் துணை முதலமைச்சர்கள் தற்போது சென்றுள்ளது என் கணவரும் கச்சேரிக்கு போகிறார் என்பது போல் உள்ளது என்றார். தூத்துக்குடி சம்பவத்திற்கு இந்நாள் வரை பிரதமர் மோடி எந்த வித ஆறுதலும் வருத்தமும் தெரிவிக்காமல் வெளிநாட்டு கார்ர்போல் செயல்படுகிறார் என்றும் துப்பாக்கி சூடு குறித்து அறிந்த உடனே மத்திய அமைச்சர் ஒருவரையாவது அனுப்பினாரா என்ற கேள்வி எழுப்பியதுடன் பிரதமரின் இச்செயல் வெக்ககேடான விஷயம் வேதனையான விஷயம் என்றார்.