¡Sorpréndeme!

அமித்ஷா, ரெட்டி கூட்டணியை கர்நாடக மண்ணில் சாய்த்த டி.கே.சிவகுமார்- வீடியோ

2018-05-19 1 Dailymotion

அமித்ஷா மற்றும் ரெட்டி சகோதரர்கள் கூட்டணியின் பலே தந்திரங்களுக்கும், மிரட்டல்களுக்கும் எதிராக காங்கிரஸ் கட்சியின் சீனியர் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமாரிடம் 2வது முறையாக தோற்றுள்ளன. அதிகார தோரணையுடன் கூடிய நடை, பார்வை, எகத்தாளமான பேச்சு, முன்னும் பின்னும் புழுதி பறக்கும் கார்களுடன் வரும் ஆதரவாளர்கள் இவையெல்லாம்தான் டி.கே.சிவகுமாரின் ஸ்டைல். கர்நாடகாவிற்கு மட்டுமே தெரிந்த இந்த ஒக்கலிக சமூகத்தை சேர்ந்த ஸ்ட்ராங் மேன், டி.கே.சிவகுமார் யார் என்பதை இந்தியாவே திரும்பி பார்த்தது கடந்த ஆண்டு நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலின்போதுதான். சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேலை குஜராத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது.

DK Sivakumar beats Amit Shah second time, first time when he made sure Ahmed PAtel wins RS election by guarding Gujarat cong MLAS in Bangalore.