¡Sorpréndeme!

இறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ

2018-05-19 6,542 Dailymotion

நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கும் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த சிம்பு தற்போது நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
எத்தனை சர்ச்சைகளில் சிக்கினாலும் சிம்புவின் ரசிகர்கள் அவரை எப்போதுமே விட்டுக்கொடுப்பதில்லை. அந்த அளவுக்கு ரசிகர்களின் அபிமானம் பெற்றவராக இருக்கிறார் சிம்பு.
சமீபத்தில் இறந்த தன் தீவிர ரசிகரும், ரசிகர் மன்ற நிர்வாகியுமான மதன் என்பவரின் 9-ம் நாள் நினைவு தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தானே போஸ்டர் ஒட்டியுள்ளார் நடிகர் சிம்பு. இந்த புகைப்படம் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர்களில் ஒருவரான சென்னையை சேர்ந்த மதன் என்பவர் கடந்த 10-ம் தேதி மரணம் அடைந்தார். அவருடைய மரணத்திற்கு நடிகர் சிம்பு அன்றே இரங்கல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.