¡Sorpréndeme!

முதல்வர் கார் முன் பொத்தென்று விழுந்தவர்களால் பரபரப்பு!-வீடியோ

2018-05-14 2,568 Dailymotion

திருப்பதி செல்லும் தமிழக முதலமைச்சருக்கு கிருஷ்ணகிரியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பின்போது, பொய் வழக்குப் போடும் போலீசாரிடம் இருந்து தங்களது ஆட்களை மீட்டுத்தரக்கோரி சிலர் முதலமைச்சரின் வாகனத்தின் முன்பு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திருப்பதி செல்கிறார். இதனால் சேலத்தில் இருந்து புறப்பட்ட அவர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்கள் வழியாக திருப்பதி செல்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல்வருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.