¡Sorpréndeme!

தொடர் கொலைகள்...குழப்பத்தில் காவல்துறை- வீடியோ

2018-05-11 1,590 Dailymotion

குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக கூறி மனநலம் பாதித்தவரை மர்ம கும்பல் தாக்கி கொடூரமாக கொலை செய்ததால் பரபரப்பு...

திருவண்ணாமலையில் நேற்று சென்னையில் இருந்து உறவினர்களுடன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற ருக்மனி என்பவரை குழந்தைகள் கடத்தும் கும்பல் என்று நினைத்து ஊர் மக்கள் ஒன்று திரண்டு தாக்கியதில் ருக்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்றவர்கள் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவரை குழந்தைகளை கடத்துபவர் என்று நினைத்து அப்பகுதியினர் உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளனர். அதேபோல் மாதவரம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டவரை பொதுமக்கள் தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவண்ணமாலை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குழந்தை கடத்தல் கும்பல் உலாவுவதாக வாட்ஸ்அப் பரவி வரும் தவறான தகவலால் பொதுமக்கள் அப்பாவி மக்களை உருட்டு கட்டை யால் தாக்குவதும் அடித்து கொலை செய்வதும் கடந்த இரண்டு நாட்களில் அதிகரித்துள்ளது. இதனிடையில் கிராமத்திற்குள் புது நபர்கள் யாரேனும் நடமாடினால் உடனே கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கும்படி போலீசார் வேண்டு கோள் விடுத்துள்ளனர். ஆனாலும் ஒருசில கும்பல் அப்பாவிகளை தாக்கிவரும் வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.