தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார். ஆனால் பாஜகவுடன் அவர் கை கோர்க்க வேண்டும் என துக்ளக் ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வருவதாக கூறியிருக்கிறார் ரஜினி. ஆனால் எப்ப வருவேன், எப்படி வருவேன் என்பதை அவர் இதுவரை சொல்லவில்லை. அவரை பின்னாலிருந்து பாஜக இயக்குகிறது என்று தமிழகம் முழுமையாக நம்புகிறது. ரஜினி அரசியல் வருகைக்கு பலரும் எதிர்ப்பாக உள்ளனர். காரணம், அவர் மக்கள் பிரச்சினைகள் குறித்து கவலைப்படாமல் கருத்து தெரிவிக்காமல் பட்டும் படாமல் இருந்து வருவதால். ரஜினியின் அரசியல் ஆலோசகர் துக்ளக் இதழின் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்திதான் என்றும் கூறப்பட்டு வருகிறது.