¡Sorpréndeme!

இரும்புத்திரை ரிலீஸுக்கு எதிராக சதி..வீடியோ

2018-05-09 2,802 Dailymotion

விஷாலின் 'இரும்புத்திரை' திரைப்படத்தை வெளியிட விடாமல் சிலர் சதி செய்து தடுப்பதாக
தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான பி.டி.செல்வகுமார் குற்றம் சாட்டியுள்ளார். இவர் விஜய்யின் உதவியாளராக இருந்தவர்.

"தயாரிப்பாளர் நலன் கருதி விஷால் நிறைய நல்ல விஷயங்களை செய்துள்ளார். விஷாலின்
திரைப்படத்தை நாங்கள் வெளியிடுகிறோம். விஷாலின் இரும்புத்திரை படத்தை வெளிவராமல்
தடுக்க மாஃபியா கும்பல் போல் செயல்படுகிறார்கள். உங்களுக்கும் விஷாலுக்கும் பிரச்னை என்றால்
எங்களை ஏன் நசுக்குகிறீர்கள்? நிறைய நடிகர்கள் இப்படி பாதிக்கப்பட்டுள்ளனர். சிவகார்த்திகேயன்
கண்ணீர் விட்டு அழுதார். லாரன்ஸ் பாதிக்கப்பட்டுள்ளார். யாரோ செய்த தவறுக்கு நாங்கள் என்ன செய்வோம். நாளை முதல்வரை சந்திக்கச் செல்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார் பி.டி.செல்வகுமார்.

மேலும் அவர், "ரிலீஸ் செய்ய திரையரங்குகள் கிடைக்கவிடாமல் தடுக்கிறார்கள். சுமார் 25
ஆண்டுகளாக இந்தக் கட்டபஞ்சாயத்து நடக்கிறது. சென்னை, செங்கல்பட்டு வினிகியோஸ்தர்
சங்கத்தலைவர் அருள்பதி இவ்வாறு செய்கிறார்" எனக் குற்றம் சாட்டியுள்ளார் பி.டி.செல்வகுமார்.

Irumbuthirai release date problem.
Producer and distributor PT Selvakumar has accused distributor Arulpathi, who tries to block irumbuthirai movie. Conspiracy to prevent the release of irumbuthirai film, Distributor complains against arulpathi,


#irumbuthirai #release #date #problem