¡Sorpréndeme!

ஹெலிகாப்டர் சுற்றுலா அறிமுகம்-வீடியோ

2018-05-07 30 Dailymotion

கோவையில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று தொடங்கி வைத்தார். கோவை துடியலூர் வட்டமலைபாலையத்தில் உள்ள கங்கா நர்சிங் கல்லூரி மற்றும் நேரு கல்வி நிறுவனங்கள் இணைந்து சுற்றுலா செல்வதற்கு ஹெலிகாப்டர் சேவையை பயன்படுத்தும் நோக்கில் ஹெலி கார்னிவெல் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி மே மாதம் 10 – ம் தேதி முதல் 15 – ம் தேதி வரை காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கோவை என்.ஜி.ஜி.ஓ காலனியில் உள்ள கங்கா நர்சிங் கல்லூரி வளாகத்தில் இந்த நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது.