¡Sorpréndeme!

டேங்கர் கப்பல் மூலம் சட்டவிரோதமாக செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது-வீடியோ

2018-05-07 3,054 Dailymotion

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு டேங்கர் கப்பல் மூலம் சட்டவிரோதமாக செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். போர்ச் சூழல் மற்றும் அரசு அச்சுறுத்தல் காரணமாக பல வருடங்களாக ஈழத்தமிழர்கள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு கடல் வழியாக தஞ்சமடைய முயற்சித்து வருகிறார்கள்.சமயங்களில் சிங்களவர்களும் வெளிநாடுகளில் தஞ்சமடைவது அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் கடல் வழியாகவே வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து செல்ல முயற்சிப்பவர்களுக்கு மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகியவை இணைப்பு நாடுகளாக இருந்து வருகின்றது.