அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பாதுகாப்பிற்காக, ஸ்பேஸ் ஃபோர்ஸ் எனப்படும் விண்வெளி படையை உருவாக்க இருப்பதாக கூறியுள்ளார். இதற்கான திட்டங்களை நீண்ட நாட்களாக உருவாக்கியதாக கூறியுள்ளார். அதேபோல் இதற்கான செலவு எவ்வளவு ஆகும் என்றும் கணக்கிட்டு இருக்கிறார். இந்த விண்வெளி படையை உருவாக்குவதன் மூலம் பூமியில் சூப்பர் பவர் நாடாக இருக்கும் அமெரிக்கா விண்வெளியிலும் சூப்பர் பவர் நாடாக மாறும் என்று கூறியுள்ளார். அவர் மனதில் பெரிய திட்டங்களை வைத்துக் கொண்டு இதை உருவாக்கியதாக கூறியுள்ளார்.