¡Sorpréndeme!

பெண்களை சமயலறைக்கு போக சொன்ன விவேக் - வீடியோ

2018-05-02 12,349 Dailymotion

கோடை விடுமுறையை எப்படி கழிக்க வேண்டும் என்று ட்வீட் போட்ட நடிகர் விவேக்கை நெட்டிசன்கள்

விளாசியுள்ளனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிக் குழந்தைகளை பெற்றோர் சம்மர்

கேம்புக்கு அனுப்பி வைக்கிறார்கள். சிலர் உறவினர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
இந்நிலையில் நடிகர் விவேக் இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர்

கூறியிருப்பதாவது,

அன்புள்ள மாணவர்கள் மற்றும் குழந்தைகள், கோடை விடுமுறையை என்ஜாய் செய்யுங்கள்.

விளையாடிய பிறகு நிறைய தண்ணீர் குடிக்கவும். பெண் பிள்ளைகளே, சமையல் அறையில் தாய்க்கு

உதவியாக இருந்து, சமையல் கற்றுக் கொள்ளவும். ஆண் பிள்ளைகள், தந்தை வேலை பார்க்கும்

இடத்திற்கு சென்று அவர் உங்களின் குடும்பத்திற்காக எப்படி உழைக்கிறார் என்பதை பார்க்கவும்.

உறவு மேம்படும் என்று விவேக் ட்வீட்டியுள்ளார்.

இன்னும் பெண் பிள்ளைகள் சமையல் அறையில் தான் இருக்க வேண்டுமா? நீங்கள் எல்லாம் திருந்தவே

மாட்டீங்களா என்று விவேக்கின் ட்வீட்டை பார்த்து சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Actor Vivekh's advice to school kids has gone wrong. Tweeples are blasting

him for his narrow mindedness.

#vivek #girls #cooking #tweet