சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகியிருக்கும் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் நாளை வெளியாவதாக இருந்தது. ஆனால், தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் மே 11-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
'பாஸ்கர் தி ராஸ்கல்' மலையாள படத்தின் ரீமேக்கான படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. பொங்கலின்போது ரிலீஸாகும் எனக் கூறப்பட்ட படம் வெவ்வேறு காரணங்களால் மூன்று முறை தள்ளிப்போனது. சினிமா ஸ்ட்ரைக் முடிவடைந்ததைத் தொடந்து ஏப்ரல் 27 (நாளை) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. 'தியா' 'பக்கா', 'பாடம்', ஹாலிவுட்டின் 'தி இன்ஃபினிட்டி வார் : அவெஞ்சர்ஸ்' ஆகிய படங்கள் நாளை வெளியாகவிருக்கின்றன. ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸ் படம் தமிழகத்தில் அதிக தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது.
தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் நாளை வெளியாகவிருந்த 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' மே 11-ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் படங்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.
Arvindswamy, Amala paul starred 'Bhaskar oru ralcal' release postponed due to Avengers release.
#bhaskarorurascal #arvindsamy #amalapaul #newmovie #avengers #karu #dhiya #pakka #paadam #newrelease