ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ஹாட்ரிக் வெற்றியை இலக்காக வைத்து ராஜஸ்தான் களமிறங்க உள்ளது. அதே நேரத்தில் மூன்றாவது வெற்றியை எதிர்நோக்கி கொல்கத்தா களமிறங்குகிறது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் 11வது சீசன் நடந்து வருகிறது.
ஜெய்ப்பூரில் நடக்கும் இந்த சீசனின் 15வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதுவரை நடந்துள்ள 14 ஆட்டங்களின் முடிவில் ஐதராபாத் அணி 3 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா 4 போட்டிகளில் 2 வெற்றி பெற்று, 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 3ல் 2ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.
rajasthan royals vs kolkatta knight riders match held on today