விஜயகாந்த்தின் கலையுலக வாழ்வில் 40 ஆண்டுகள் ஆனதையொட்டி நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஜயகாந்த்தை வைத்து நிறைய வெற்றிப் படங்களை இயக்கிய டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்துகொண்டு பேசினார். "உங்களுடைய கேப்டன்.. என்னுடைய மூச்சு, உயிர்த்துடிப்பு, என்னுடைய வாழ்க்கை விஜயகாந்த். நட்புனா என்னனு கேட்டா அது விஜயகாந்த். அன்புனா என்னனு கேட்டா விஜயகாந்த். மரியாதைக்கு என்ன அர்த்தம்னு கேட்டா அது விஜயகாந்த். நன்றிக்கு என்ன அர்த்தம்னு கேட்டா அது விஜய்காந்த். மொத்தத்துல மனிதனுக்கு என்ன அர்த்தம்னு கேட்டா அது விஜயகாந்த். சாகுறவரைக்கும் வாழ்றது வாழ்க்கையில்ல.. அடுத்தவங்க மனசுல வாழ்றவரைக்கும் தான் வாழ்க்கை.