¡Sorpréndeme!

அந்த மானங்கெட்ட நற்பெயர் எங்களுக்கு வேணாம்! - தமிழிசைக்கு இயக்குநர் பதிலடி!

2018-04-13 5,219 Dailymotion

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டனர். அந்தப் போராட்டத்திற்குப் பிறகு சென்னையில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. ஐபிஎல் போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட திரைக் கலைஞர்கள், அரசியல் கட்சியினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
ஆனால், பாஜக-வினர் இந்தப் போராட்டங்களை விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக பாஜக செயலாளர் தமிழிசை "ஐபிஎல் கிரிக்கெட் எதிர்ப்பு அநாகரிகத்தின் உச்சகட்டம்; ஐபிஎல் ரத்தால் தமிழகத்திற்கு ரூ.1500 கோடி பொருள் இழப்பு மட்டுமல்ல தமிழகத்தின் நற்பெயருக்கே பெரும் களங்கம்." என கருத்துத் தெரிவித்திருந்தார்.

Director Naveen retaliates to thamizhisai's opinion.

#Gobackmodi #Naveen #cauvery