பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கறுப்புக்கொடி காட்டினால் நாங்கள் பச்சைக்கொடி காட்டுவோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கறுப்புக்கொடி காட்டினால் அதிமுகவினர் பச்சைக்கொடி காட்டுவார்கள் என கூறினார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் கருத்துக்கள் குவிந்து வருகின்றன.
Netizens sharing their views on Minister Rajendra Balaji talk about green flag to the Prime Minister Modi.