கமல்ஹாசன் கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருவதை, நடிகரும், அரசியல்வாதியுமான டி.ராஜேந்தர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த இலட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர், ஆபாச நடிகை ஷகீலாவுடன் கமல்ஹாசனை ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
'மக்கள் நீதி மய்யம்' கட்சியை சமீபத்தில் துவக்கிய கமல்ஹாசன் நேற்று திருச்சியில் கட்சியின் பொதுக்கூட்டத்தை நடத்தினார். கமலின் அரசியல் பிரவேசத்தை கடுமையாக எதிர்த்துக் கருத்துகளைக் கூறி வருகிறார் டி.ஆர்.
"தமிழ்நாட்டில் கூட்டம் சேர்ப்பது ஒரு பெரிய விஷயம் இல்லை. நாளைக்கே ஷகீலா கட்சி ஆரம்பித்தால் கூடத்தான் அவர் பின்னால் நிறைய பேர் சேருவார்கள். ஆனால், அவர்கள் எல்லாரும் ஷகீலாவுக்கு ஓட்டு போடுவார்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் டி.ராஜேந்தர்.
"நான் 1980-ம் ஆண்டு முதல் ரயிலில் தான் ஊருக்குச் செல்கிறேன். கருணாநிதி, எம்ஜிஆர் உள்பட பல தலைவர்கள் ரயிலில் சென்றுள்ளனர். கமல் விமானத்தில் மட்டுமே செல்பவர். திடீரென ரயிலில் செல்கிறார். 13 வருடமாக அவருக்கு ரயில்வே ஸ்டேஷன் தெரியாதா அல்லது ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லையா?" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார் டி.ஆர்.
ஸ்டெர்லைட் பிரச்னை குறித்த செய்தியை இருட்டடிப்பு செய்துவிட்டு கமல்ஹாசன் ரயிலில் போனதை ஊடகங்கள் பெரிதாக்குந்தாக டி.ராஜேந்தர் கண்டனம் தெரிவித்தார். தொடர்ச்சியாக கமல்ஹாசனின் அரசியலை டி.ராஜேந்தர் கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.
"பா.ஜ.க நம்மைப் பிரித்து ஆள நினைக்கிறது. எடப்பாடி அரசு, மோடியின் பினாமி அரசு. நாம் அனைவரும் தனித்தனியாகப் போராடாமல் ஒன்றுசேர்ந்து போராடினால், மத்திய அரசுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்" என்றும் கூறியிருக்கிறார் டி.ஆர்.
T.Rajendhar compares Kamalhaasan with actress shakeela. T.R criticizes kamalhaasan's political entry.