சூப்பர்ஹிட்டான 'டெம்பர்' தெலுங்குப் படம், இந்தியில் 'சிம்பா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. ரோகித் ஷெட்டி இயக்கும் இந்தப் படத்தில், ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்க, சாரா அலிகான் ஹீரோயினாக நடிக்கிறார். கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க நடிகர் மாதவனை கேட்டிருந்தார்கள். கடந்த மாதம் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் இருக்கிறார் மாதவன். இன்னும் முழுமையாகக் குணமடையாத நிலையில், அவரால் தற்போது ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியாது. எனவே, அவருக்குப் பதிலாக பிரபல வில்லன் நடிகர் சோனு சூத் அந்த கேரக்டரில் நடிக்கிறார். தமிழில் 'சந்திரமுகி', 'ஒஸ்தி' உள்ளிட்ட பல சில படங்களில் நடித்திருக்கிறார் சோனு சூத். நடிகர் மாதவனுக்கு இந்தப் படம் கைவிட்டுப்போனது வருத்தமாம். 'டெம்பர்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விஷால் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் படத்திலாவது வில்லன் வேடத்தில் மாதவன் நடிக்கவைக்கப்பட்டால் ஹேப்பி தான்.
Telugu movie 'Temper' is being remade in Hindi as 'Simbha'. Actor Madhavan was asked to cast a villain role in this film. But Madhavan was suffered, instead of him, villain actor Sonu Sood plays this character.