¡Sorpréndeme!

குஜராத்தில் அதிகாலை மிதமான நிலநடுக்கம்.

2018-03-29 2 Dailymotion

குஜராத் மாநிலம் ஹான்ஜியாசர் பகுதியில் அதிகாலை 4.03 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 4.6ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. உயிருக்கோ, உடமைக்கோ சேதம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. கட்ஜ் பகுதியில், 4.2 ரிக்டர் அளவுகோலில் இம்மாதம் 10ம் தேதி நில நடுக்கம் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், மீண்டும், அம்மாநிலத்தின் மற்றொரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2001 ஜனவரி 31ம் தேதி குஜராத் மாநிலம், கட்ஜ் பகுதியில் நேரிட்ட நிலநடுக்கத்தால் 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1,67,000க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 4 லட்சம் வீடுகள் தரைமட்டமாயின. 6 லட்சம் மக்கள் வாழிடம் இல்லாமல் வேறு நகரங்களுக்கு இடம் பெயர்ந்தனர். இந்தியா கண்ட மிகப்பெரிய பூகம்பமாக அந்த சம்பவம் பார்க்கபபடுகிறது. இந்த நிலையில், அடுத்தடுத்த நில அதிர்வுகள் குஜராத் மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளன.

An earthquake of magnitude 4.6 on the Richter scale hit Rajkot's Hanjiyasar village on Thursday morning. As per the meteorological department, the earthquake occurred at around 04:03 am in the morning.