¡Sorpréndeme!

ஆணையம் அமைக்காவிட்டால் பார்க்கலாம்... எடப்பாடி பேட்டி....வீடியோ

2018-03-28 865 Dailymotion

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்துள்ள காலக்கெடுக்குள் மத்திய அரசு அமைக்காவிட்டால் தமிழக அரசு அடுத்து எடுக்க கூடிய நடவடிக்கை குறித்து கலந்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார். நேற்று மருத்துவமனை மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் ஜலகண்டபுரத்தில் உள்ள டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தார். இந்நிலையில் இன்று சேலத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட அவர் சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்துள்ள காலக்கெடுக்குள் மத்திய அரசு வாரியத்தை அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். உச்ச நீதிமன்ற உத்தரவு படி குறிப்பிட்டுள்ள காலக்கெடுக்குள் வாரியத்தை மத்திய அரசு அமைக்கா விட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து தமிழக அரசு சார்பில் கலந்து ஆலோசனை செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Des : The Chief Minister said that if the central government is not set up by the Supreme Court for setting up Kaveri Management Board,