¡Sorpréndeme!

விஷவாயு தாக்கி மூவர் உயிரிழப்பு...வீடியோ

2018-03-28 160 Dailymotion

கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆம்பூர் அருகே தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை உள்ளது. இத் தொழிற்சாலையில் உள்ள கழிவு நீரை அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது தொட்டியில் இருந்து எதிர்பாராத விதமாக விஷ வாயு வெளியேறியுள்ளது. விஷவாயு தாக்கியதில் தொட்டிக்குள் இருந்த மூன்று தொழிலாளர்கள் மூச்சு தினறி உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட போலீசார் விரைந்து வந்து மூவரின் உடலையும் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பியதுடன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிற்சாலைகளில் கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழப்பது வேலூர் மாவட்டத்தில் வாடிக்கையாகி வருவதாகவும் இது குறித்து அரசு சம்மந்தப்பட்ட தொற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.