¡Sorpréndeme!

போலீசுக்கு அரிவாள் வெட்டு...3 ரவுடிகள் கைது- வீடியோ

2018-03-28 5 Dailymotion

பூந்தமல்லி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை அரிவாளால் வெட்டிய 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அருகே பூந்தமல்லியில் காவலர் அன்பழகன் என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார். அந்த வழியே மோட்டார் சைக்கிள் ஒன்று வந்துள்ளது. அதில் 3 பேர் பயணம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களை காவலர் அன்பழகன் தடுத்து நிறுத்தியுள்ளார். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த ரவுடிகள் காவலரை சரமாரியாக தாக்கினர். அப்போது அந்த ரவுடிகளில் ஒருவன் தான் பதுக்கி வைத்திருந்த அரிவாளால் காவலர் அன்பழகனை ஓங்கி வெட்டினான். இதில் காவலர் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பன்னீர்செல்வம், சுதீஷ்குமார் மற்றும் ரஞ்சித் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. தப்பியோட முயன்ற அந்த ரவுடிகளை திருவேற்காடு போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸையே ரவுடிகள் வெட்டிய சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.