பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த 'பாகுபலி 2' படம் இந்திய அளவில் அதிக வசூலைக் குவித்து தற்போது வரை முதலிடத்தில் உள்ளது. வசூலில் பல புதிய சாதனைகளை முதன்முதலில் படைத்த 'பாகுபலி 2' படம் பைரசி டவுண்லோடிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 'பாகுபலி 2' படத்தை 93 லட்சம் பேர் வரை இணையதளங்களில் டவுண்லோட் செய்துள்ளனராம். பைரசி தளங்களில் சினிமா படங்கள் பற்றி ஆய்வு செய்த ஜெர்மனி நிறுவனம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. 'பாகுபலி 2' படத்தை 93 லட்சம் பேர் வரை இணையதளங்களில் டவுண்லோட் செய்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இரண்டாமிடத்தில் இந்தி படமான 'ரயீஸ்' 62 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்துள்ளது. 'பாகுபலி 2' படம் 93 லட்சம் டவுண்லோடுகள் என்றாலும், அதை மற்றவர்களுக்குக் 'காப்பி' செய்து கொடுத்த பார்த்தவர்களின் விவரம் இதில் வராது. அப்படியானால், உண்மையாக பைரசியில் பார்த்தவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும். சினிமா துறையினருக்கு பெரும் குடைச்சலாக இருக்கும் பைரசி சினிமா தளங்கள் இதனால் பெருமளவு பணம் ஈட்டுகின்றன. சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் அடைகின்றன. இதற்கெல்லாம் தீர்வு ஏற்படுமா என்பது தான் சினிமா ஆர்வலர்களின் கேள்வி.
The 'Baahubali 2' film released last year is the highest grossing Indian film ever. 'Baahubali 2' film has been downloaded on piracy websites up to 93 lakhs.