¡Sorpréndeme!

11 நாளில் பதற வைப்பேன்! சசி சபதம்!

2018-03-24 15,230 Dailymotion

சசிகலாவின் பரோல் விடுப்பு முடிவதற்கு இன்னும் 11 நாட்கள் இருக்கின்றன. நடராஜன் உடல் அடக்கம் முடிந்த அன்று இரவில் இருந்தே பஞ்சாயத்துகள் தொடங்கிவிட்டன என்கின்றனர் குடும்ப கோஷ்டிகள். ' அதிகாரத்தில் உள்ளவர்களை அசைக்கும்விதமாக அடுத்து வரும் நாட்களை பயன்படுத்திக் கொள்ள இருக்கிறார் சசிகலா' என்கின்றனர் அவர்கள். நடராஜனின் இறுதிச் சடங்குகளை நடத்துவதற்காகக் கடந்த 20-ம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியே வந்தார் சசிகலா. முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உடல் அடக்கம் முடிந்த பிறகு, அன்று இரவு மட்டும் அமைதியாக இருந்தார். ஆனால் அடுத்த நாள் காலை முதலே பஞ்சாயத்துகள் களைகட்டத் தொடங்கிவிட்டன. நடராஜன் வாங்கிப் போட்ட சொத்துக்கள், அவைகளை முறைப்படி மாற்றவது உள்பட சொத்து விவகாரம் குறித்து தீவிர விவாதம் நடந்து வருகிறது.



Sasikala assured her supporters will solve the issues within Parole period and regain the power within 11 days of Parole ends, because of sasikala's promise supporters were much happier.