பரபரப்பான சூழ்நிலையில் ராஜ்யசபா தேர்தல் இன்று நடைபெறுகிறது. சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் விருந்து கொடுத்து தனது ஆதரவை மாயாவதிக்கு உறுதிபடுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சி ஆதரவும் இருப்பதால் தனது வேட்பாளரை எம்பியாக வெற்றி பெற வைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் மாயாவதி. 245 உறுப்பினர்களை கொண்ட ராஜ்யசபாவில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 83 உறுப்பினர் பலம் உள்ளது. அதில் பாஜகவுக்கு மட்டும் இருப்பது உறுப்பினர்கள் 58 மட்டுமே. 16 மாநிலங்களில் காலியாகும் 58 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடக்கிறது. இதில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ராஜ்யசபாவில் தனது உறுப்பினர்களின் பலத்தை அதிகரிக்க நினைக்கிறது பாஜக மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து 10 எம்பிக்கள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். இதில் பாஜக 8 இடங்களிலும், சமாஜ்வாடி ஒரு இடத்திலும் வெற்றி பெறும். ஒரு இடத்துக்கு பலத்த போட்டி நிலவுகிறது. உத்தரபிரதேசத்தில் மொத்தம் 403 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஒரு வேட்பாளர் வெற்றி பெற 37 எம்.எல்.ஏ.க்.களின் வாக்குகள் தேவை. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 324 பேர் உள்ளனர். சமாஜ்வாடி கட்சிக்கு 47 எம்எல்ஏக்கள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 19, காங்கிரசுக்கு 7, ராஷ்ட்டீரிய லோக்தளத்துக்கு 1, எம்எல்ஏவும் உள்ளனர்.
UP will vote on Friday to send 10 candidates to the Rajya Sabha. A united SP and presence of Raghuraj Pratap Singh, independent MLA from Kundla at the dinner has provided the much-required re-assurance that Mayawati was looking for.