¡Sorpréndeme!

உணவு கேட்டு வந்த மூதாட்டியை கடலில் வீசிய இளைஞர்கள்-

2018-03-22 4,802 Dailymotion

நாகர்கோவில் அருகே மூதாட்டி ஒருவரை குழந்தை கடத்த வந்ததாக கூறி இளைஞர்கள் கடலில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த மணக்குடியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் வீடுகளை நோட்டமிட்டு கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டி குழந்தைகளை கடத்துவதாக வதந்தி பரவி வருகிறது.

இந்நிலையில் மூதாட்டி ஒருவர் மணக்குடியில் ஒவ்வொரு வீடாக சென்று பசிக்கு உணவு கேட்டுள்ளார். ஆனால் மூதாட்டி குழந்தைகளை கடத்த நோட்டமிடுவதாக கூறி அப்பகுதி இளைஞர்கள் மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்தனர்.