புகையாக பரவி, காட்டுத்தீயாக மாறி சுற்றி வளைத்தது என்று குரங்கணி தீ விபத்தில் சிக்கி எமனின் வாசல் வரை சென்று பிழைத்த சஹானா, விஜயலட்சுமி ஆகியோர் திகில் அனுபவங்களை கூறி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள குரங்கணி வனப்பகுதியில் வெள்ளிக்கிழமையன்று மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் ஞாயிறன்று கீழிறங்கினர். அப்போது பரவிய காட்டுத்தீயின் நாக்குகள் 9 பேரின் உயிரை குடித்தது. 27 பேர் மீட்கப்பட்டாலும் 10 பேர் அதிக தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.