¡Sorpréndeme!

திமுகவிற்கு பயந்து செயல்பாடற்ற அரசு செயல்படுகிறது கனிமொழி எம்.பி

2018-03-13 194 Dailymotion

செயல் பாடற்ற தமிழக அரசு திமுகவிற்கு பயந்து தற்போது செயல்படுகிறது என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வருகிற 24 25-ந் தேதிகளில் தி.மு.க. மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டு திடலை கனிமொழி எம்.பி பார்வையிட்டார்பின்னர் மாநில மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டதில் பேசிய அவர் முக்கிய கால கட்டத்தில் இந்த மாநாடு நடக்கிறது. தமிழகம் இந்தியாவே இந்த மாநாட்டை உன்னிப்பாக கவனித்து வருகிறது. செயல் பாடற்ற அரசு தற்போது செயல்படுகிறது இந்த மாநாட்டின் மூலம் இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தெரிவித்தார் பணம் பாத்திரத்தை பெற்றுக்கொண்டு 5 வருடத்துக்கு நாம் ஓட்டுரிமையை அடமானம் வைக்கிறோம். அவ்வாறு செய்யாமல் பெண்கள் விழிப்புடன் இருந்து சரியான நபரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார் கூட்டத்தில் மாநாட்டுக்குழு தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும் மாநாட்டு வரவேற்பு குழு தலைவருமான முத்துசாமி ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் பெருந்துறை ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Kanimozhi MP said that the Tamil Nadu government is acting in fear of the DMK