¡Sorpréndeme!

அதர்வா நடிக்கும் அடுத்த படத்தை ஶ்ரீகணேஷ் இயக்க போகிறார்!- வீடியோ

2018-03-09 1 Dailymotion

மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா நடிக்கும் அடுத்த படத்தை யார் இயக்கப்போவது என்ற விவரம் கிடைத்துள்ளது. '8 தோட்டாக்கள்' படத்தை இயக்கிய ஶ்ரீகணேஷ் இந்தப் படத்தை இயக்க இருக்கிறாராம். அதர்வா நடிப்பில் கடந்த வருடம் 'ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்' படம் ரிலீஸானது. 'செம போத ஆகாத', 'ருக்குமணி வண்டி வருது', 'இமைக்கா நொடிகள்', 'ஒத்தைக்கு ஒத்த', 'பூமராங்' ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். இவற்றில் சில படங்களில் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அதர்வா அடுத்து நடிக்க இருக்கும் படத்தை யார் இயக்கப் போவது என்ற தகவல் கிடைத்துள்ளது. கடந்த வருடம் ரிலீஸாகி விமர்சன ரீதியாக பெரிய அளவில் வரவேற்கப்பட்ட படம் '8 தோட்டாக்கள்'. இந்தப் படத்தின் இயக்குநர் ஸ்ரீகணேஷ் தான் அடுத்து அதர்வாவை இயக்கப் போகிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இது உருவாக இருக்கிறது எனக் கூறப்படுகிறது.


Atharva's next film to be directed by '8 Thottakkal' director Sri ganesh.