¡Sorpréndeme!

தமிழிசையை பேய் என விமர்சித்த எச்.ராஜா ஆதரவாளர் கல்யாண் ராமன்- வீடியோ

2018-03-08 3,323 Dailymotion

தமிழக பாஜகவில் இருந்து பெரியார் சிலையை உடைத்த முத்துராமனை நீக்கியதற்கு எச்.ராஜாவின் தீவிர ஆதரவாளர் கல்யாண் ராமன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார், தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டதை தொடக்கம் முதலே ஒரு பிரிவினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். தமிழிசையை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அப்பிரிவினர் தொடர்ந்து லாபி செய்து வருகின்றனர். ஆனால் டெல்லி மேலிடமோ தமிழிசை சவுந்தராஜனுக்கு ஆதரவாக இருக்கிறது. ஆர்.கே.நகர் தேர்தலின் போது தமிழிசைக்கு அந்த பிரிவினர் ஒத்துழைக்கவில்லை. ஆனால் தேர்தல் முடிந்த பிறகு கேவலமான தோல்விக்கு தமிழிசையே காரணம் என டெல்லியில் புகார் வாசித்தனர். தமிழிசையோ என்ன நடந்தது? யார் யார் எப்படி முறைத்துக் கொண்டிருக்கிறார்கள்? என டெல்லியிடம் விவரித்தார். இதையடுத்து தமிழிசைக்கு எதிரான பிரிவினருக்கு டெல்லி தலைமை டோஸ் விட்டது.


BJP National Secretary H Raja's supporters revolt against party TN President Tamilisai Soundrarajan.