¡Sorpréndeme!

குறும்பட புகழ் லட்சுமி: பெண்களுக்கு எதிரி பெண்களே- வீடியோ

2018-03-08 1 Dailymotion

பெண்களுக்கு எதிரி பெண்களே என்று லட்சுமி குறும்பட புகழ் லட்சுமி ப்ரியா வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். லட்சுமி குறும்படம் மூலம் பிரபலமானவர் லட்சுமி ப்ரியா. மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் பேசி, நடித்த வீடியோ ஒன்று வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது. அந்த வீடியோவில் லட்சுமி சொல்லியிருப்பது சத்தியமான வார்த்தைகள். ஆண்கள் அடக்கி வைக்கிறார்கள் என்று பெண்கள் பல காலமாக குறை சொல்கிறோமே உண்மையில் அவர்களால் மட்டும் தானா பிரச்சனை என்று நறுக்கென கேள்வி கேட்கிறார் லட்சுமி. பெண்களுக்கு எதிரிகள் பெண்களே என்ற உண்மையை பளிச்சென்று சொல்கிறார் லட்சுமி. ஒரு பெண் மற்ற பெண்ணை எப்படி அவமதிக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். சம உரிமை பற்றி வாய் கிழிய பேசும் பெண்கள் ஒரு ஆண் அழுதால் ஏன்டா பொட்டை மாதிரி அழுகிறாய் என்று கேட்கிறோம். அப்படி என்றால் பெண்கள் வலிமையில்லாதவர்கள் என்பதை நாமே ஒப்புக் கொள்கிறோமா என்று முகத்தில் அறைந்தது போன்று கேட்கிறார் லட்சுமி. அலுவலகத்தில் ஒரு பெண் அழகாக இருந்து நன்றாக வேலை பார்த்து வெற்றிகரமாக இருந்தால் அது சக பெண் ஊழியர்களுக்கு பிடிக்காது. உடனே அந்த பெண்ணை பற்றி தப்புத் தப்பாக பேசுவார்கள். பெண்கள் சக பெண்களை பற்றி கருத்தோ, குறையோ கூறாமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பெண்கள் யாவரும் நிம்மதியாக இருக்கலாமே என்று தெரிவித்துள்ளார் லட்சுமி.