நடிகர் சிம்புவை பற்றி நல்ல விஷயங்களைச் சொல்பவர்களைத் தாண்டி குறை கூறுபவர்கள் தான் அதிகம். படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வர மாட்டார், இயக்குனர் சொல்வதைச் செய்ய மாட்டார் என நிறைய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டு வருகிறது. ஆனால், மணிரத்னம் இயக்கத்தில் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடித்துவரும் சிம்பு படப்பிடிப்பு நேரத்துக்கு முன்பே முழுவதுமாக ரெடியாகி நடிக்கத் தயாராகி விடுகிறாராம். திரையுலகில் சிம்பு என்றாலே வம்புதான் என்பார்கள். அவரை வைத்து ஒரு படம் இயக்குவதற்குள் போதும் போதும் என்றாகி விடும் என்கிற பேச்சு தான் அதிகம் கேட்கமுடியும். 'AAA' படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் சிம்புவைப் பற்றி அத்தனை குற்றச்சாட்டுகளைக் கூறினார்கள். இவ்வளவு நாளாக படப்பிடிப்பு 9 மணிக்கு என்றால் மதியத்திற்கு மேல்தான் ஸ்பாட்டுக்கு வருவார் என்று கூறப்பட்ட நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் 9 மணி என்றால் அதற்கு முன்பே சென்று மேக்கப் போட்டு தயாராகி விடுகிறாராம் சிம்பு. இதனால் படக்குழுவினரே ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
Simbu, who works in Mani Ratnam's film 'Chekka chivantha vaanam', is ready before the shooting time. The crew is surprised for simbu's punctuality.