deS:
நயன்தாரா பற்றிய லேட்டஸ்ட் தகவலை அறிந்தவுடன் பலரும் கேட்கும் கேள்வி இது தான், கொள்கையை மறந்துட்டாரா?
லேடி சூப்பர் ஸ்டாராகிவிட்ட நயன்தாரா இனி பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்வது இல்லை என்ற முடிவை எடுத்தார். பெரிய ஹீரோக்களுடன் நடித்தால் மரத்தை சுத்தி சுத்தி வந்து பாட்டு பாடுவதுடன் தனது வேலை முடிந்துவிடும் என்பதால் அப்படி ஒரு முடிவை எடுத்தார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்யத் துவங்கினார்.
இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாருக்காக தனது கொள்கையை தளர்த்தி தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஜெய் சிம்ஹா படத்தில் நடித்தார் நயன்தாரா.
சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் விசுவாசம் படத்தின் ஹீரோயின் நயன்தாரா தான். தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்பதால் மறுபடியும் தனது கொள்கையை தளர்த்தினார் நயன்.
உலக நாயகன் கமல் ஹாஸனை வைத்து ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நயன்தாரா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் ரஜினியை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திலும் நயன்தாராவை நடிக்க வைக்க ஆலோசனை நடக்கிறதாம்.
மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குகிறார்களாம். அந்த படத்தில் மம்மூட்டி ராஜசேகர் ரெட்டியாக நடிக்கிறாராம். யாத்ரா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிப்பது இல்லை என்று முடிவு செய்த பிறகு நயன்தாரா வரிசையாக பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்கிறார். அவரின் கொள்கை என்னாச்சு என்ற கேள்வி எழுந்துள்ளது.
Nayanthara earlier decided not to act with big heroes as her character would be reduced to do romantic scenes only. Of late Nayanthara is signing project after project with big heroes.