¡Sorpréndeme!

கண்காணிப்பாளர் கண்டித்து போஸ்ட்டர்- வீடியோ

2018-03-05 8 Dailymotion

ஜாதி ரீதியாக செயல்படும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்டித்து ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு.

தேனி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜாதி ரீதியாக செயல்பவதாகவும் தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் பதவி உயர்வு உள்ளிட்டவைகளை வழங்கி வருவதாகவும் தனக்கு வேண்டாதவர்களை இடமாற்றம் செய்வதாகவும் இவை அனைத்திற்கும் ஆயுதப்படை ஆய்வாளர் சீனிவாசனும் உடந்தையாக இருப்பதாக கூறி தென்னிந்தி பார்வேடு பிளாக் கட்சியினர் கம்பம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் ஆயுதப்படை ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோரது புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டிகளை ஒட்டியுள்ளர். இந்த சுவரொட்டியானது கம்பம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அரசு மருத்துவமணை பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. போஸ்டர் ஒட்டியது தொடர்பாக தென்னிந்திய பார்வேடு கட்சியை சேர்ந்த சுரேஷ் சம்சுதின் ஆகியோரை கம்பம் வடக்கு காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் கண்காணிப்பாளரை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களால் கம்பம் பகுதியில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.

DES : The cinematic actor of the Theni District District Superintendent of Police condemned the poster.