நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சியுடன் கூட்டணி வைத்ததால் மணிப்பூரில் நாகாலாந்து மக்கள் முன்னணி, பாஜகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்கினால் அங்கு ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. நாகாலாந்தில் கடந்த 2013ம் ஆண்டு நாகாலாந்து மக்கள் முன்னணியுடன் பாஜக கூட்டணி வைத்துக் கொண்டு ஆட்சியை பிடித்தது. தற்போது 2018-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி நாகாலாந்து மக்கள் முன்னணியுடனான கூட்டணியை பாஜக முறித்துக் கொண்டது. இதைத் தொடர்ந்து புதிய கட்சியான தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சியுடன் (என்டிபிபி) இணைந்து பாஜக தேர்தலை சந்தித்தது. என்டிபிபியானது நாகாலாந்து மக்கள் முன்னணியில் அதிருப்தியாக இருந்தவர்கள் தொடங்கிய கட்சியாகும்.
As the BJP in Nagaland supports a new party NDPP which was formed by rebels of NPF, it threatens BJP to withdraw their support in Manipur.