விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. சென்னையில் ஷூட்டிங் முடித்து, மும்பைக்குச் சென்ற படக்குழு அங்கு சில காட்சிகளை மட்டும் எடுத்துவிட்டு மீண்டும் சென்னை வந்தது.
விஜய்யை வைத்து 'துப்பாக்கி', 'கத்தி' ஆகிய படங்களை இயக்கிய முருகதாஸ், தற்போது விஜய்யை இயக்கி வருகிறார். துப்பாக்கி படத்தில் ராணுவ வீரரைப்பற்றிய கதையை படமாக்கிய முருகதாஸ், கத்தியில் விவசாயிகள் பிரச்னையை படமாக்கினார். 'விஜய் 62' படத்திலும் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பிரச்னை பேசப்படுகிறதாம்.
விஜய்யின் 62-வது படமான இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
'விஜய் 62' படம் வரும் தீபாவளிக்கு வெளிவர இருப்பதால் பட வேலைகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. எவ்வளவு தான் ரகசியமாக சில விஷயங்களை வைத்திருந்தாலும் எப்படியாவது லீக் ஆகிவிடுகிறது.