¡Sorpréndeme!

ஸ்ரீதேவி மரணத்துடன் விளையாடிய தேசிய ஊடகங்கள்- வீடியோ

2018-03-01 491 Dailymotion

ஊடக தர்மம் என்றொன்று இருக்கிறது. அதை யாவரும் மறந்துவிட்டு டி.ஆர்.பியில் யார் முதல் இடம் பிடிக்கிறோம் என்ற பந்தையத்தில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார். இந்த ஊடக தர்மத்தை அன்று முதல் இன்று வரை கடைப்பிடிக்கும் ஒரே ஊடகம் தூர்தர்ஷன் தான். காரணம் அது அரசு ஊடகம், அதற்கு டிஆர்பி பந்தயத்தில் கலந்துக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. மேலும், செய்தியில் தங்கள் கற்பனைகளை புகுத்தாமல், செய்தியாக மட்டுமே அளித்து வருகிறது தூர்தர்ஷன். ஆகையால் தான் நமக்கு அது போரடிக்கும் சேனலாக இருக்கிறது. நமது இந்திய ஊடகங்கள் சிலவன ஊடக தர்மம் என்பதை தாண்டி, சில சமயம் மனிதத்தையும் மறந்து செயலப்பட்டுள்ளன. சில சமயம் கேலி கூத்துகளிலும் ஈடுப்பட்டுள்ளன. கிரியேட்டிவாக செயற்படுகிறோம் என்ற பெயரில் சில ஊடகனால் நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தின் போது எல்லை மீறிய செயல்களில் ஈடுப்பட்டன.

அவை பலதரப்பட்ட மக்களின் கண்டனத்திற்கும், கோப குரலுக்கும் ஆளாகின. முக்கியமாக சமூக தளங்களில் பரவலாக எதிர்மறை விமர்சனங்களுடன் வைரலாக பரப்பட்டன. அவற்றில் சில கேலி கூத்துகளை தான் நாம் இந்த தொகுப்பில் காணவுள்ளோம்...