சண்டிகரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரியில் மர்மமான முறையில் உயிரிழந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மாணவர் கிருஷ்ணபிரசாத்தின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. ஹரியானா மாநிலம் சண்டிகரில் மத்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கும் முதுநிலை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்(PGIMER) உள்ளது. இந்த மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மாணவர் கிருஷ்ணபிரசாத், கல்லூரி விடுதி அறையில் தங்கி முதுநிலை முதலாமாண்டு மருத்துவம் படித்து வந்தார்.
Medical student Krishnaprasath who studied at Chandigarh PGIMER died mysteriously couple of days before, after medical investigations his body brought back to his hometown Rameswaram.