¡Sorpréndeme!

பார்த்திபனின் 'உள்ளே வெளியே 2' - சமுத்திரக்கனி ஹீரோ- வீடியோ

2018-02-28 1,314 Dailymotion

Actor and director Parthiepan is planning to direct Ulle Veliye 2 with Samuthirakani in the lead role. The film will also have ‘Aadukalam’ Kishore, Robo Shankar, Mamta Mohandas and MS Baskar. Parthiepan has confirmed the news in a recent interaction and he will also be seen playing an important role in the film.


பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்து 1993-ல் வெளியான படம் 'உள்ளே வெளியே'. ஆபாசமான படம் என்று கடும் கண்டனங்களைச் சந்தித்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார் பார்த்திபன். பார்த்திபன் இயக்கும் 'உள்ளே வெளியே' படத்தின் இரண்டாம் பாகத்தில், சமுத்திரக்கனி நடிக்க இருக்கிறார். பொதுவாக, பார்த்திபன் இயக்கும் படங்களில் அவரேதான் ஹீரோவாக நடிப்பார். ஆனால், இந்தமுறை சமுத்திரக்கனியை ஹீரோவாக நடிக்க வைக்க இருக்கிறார். 1989-ம் ஆண்டு 'புதிய பாதை' என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமாகி அவரது குருநாதர் பாக்யராஜைப் போல முதல் படத்திலேயே பெண்களை அதிகம் கவர்ந்தார். அடுத்த படமே இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்ததாக எடுத்து எதிர்ப்பைச் சம்பாதித்தார். 18-வயதில் அமைதி+வசீகரமான பெண்ணும், 28-வயதில் கவர்ந்திழுக்கும் சிலுக்கு பெண்ணும், 38-வயதில் இளம் பெண்ணின் அழகிய அம்மாவும் தேவை!" என ட்வீட் போட்டு நடிகைகளைத் தேடினார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படத்தின் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

Parthiban has decided to take a second part of the film 'ulle veliye'. Samuthirakani is acting lead role in this film.