¡Sorpréndeme!

சிரியாவை கூகுளில் அதிகம் தேடிய தமிழர்கள்- வீடியோ

2018-02-27 1 Dailymotion

டமாஸ்கஸ்: சிரியாவில் நடக்கும் போர் பற்றி தமிழர்கள்தான் உலகிலேயே கூகுளில் அதிகம் தேடி இருக்கிறார்கள். முதல் 50 இடங்களில் 90 சதவிகித இடங்கள் தமிழகத்தை சேர்ந்தது.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 9 நாட்களில் மட்டும் இதுவரை 700 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.