¡Sorpréndeme!

வழக்கறிஞர்களால் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்- வீடியோ

2018-02-23 1,524 Dailymotion

வழக்கறிஞர்களால் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் பணி முடிந்து வீட்டிற்கு சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவங்கையில் சாலையை செப்பனிடக்கோரி பேருந்து நிலையத்தில் வழக்கறிஞர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அரசு பேருந்தை செல்வராஜ் என்பவர் ஓட்டிச்சென்றுள்ளார். இதனையடுத்து வழக்கறிஞர் ஒருவர் பேருந்தை துரத்திச் சென்று தடுக்க முயன்று மயக்கம் அடைந்தார். இதையடுத்து மற்ற வழக்கறிஞர்கள் பேருந்தை தடுத்து நிறுத்தி ஓட்டுநர் செல்வராஜின் சட்டையை இழுத்து தாக்கினர்.