¡Sorpréndeme!

மனநலமற்ற பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வஞ்சகர்கள்..வீடியோ

2018-02-21 711 Dailymotion

மேற்கு வங்கத்தில் மனநலம் சரியல்லாத பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு பின் மரணம் அடையும் அளவிற்கு தாக்கப்பட்டு இருக்கிறார். தற்போது இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மிகவும் தாமதமாகவே இவர் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார். இதனால் இவரது உடல் நிலை இப்போது மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் மேற்கு வங்கத்தின் தினாஜ்புர் என்ற பகுதியில் நடந்து இருக்கிறது. போலீஸ் இது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

தினாஜ்புர் பகுதியில் இருக்கும் காட்டுப்பகுதி ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 4 பேர் சேர்ந்த அந்த 35 வயது மனநலமற்ற பெண்ணை வன்புணர்வு செய்து இருக்கிறார்கள். மேலும் இருப்புக் கம்பியால் மோசமாக உடல் முழுக்க தாக்கி உள்ளனர்.