குழந்தை என்பது நிஜமாகவே பெரிய வரம் தான். அதுவும் இந்த காலத்தில் இதை யாராலும் மறுக்கவே முடியாது. பெண்கள் மத்தியில் கருவளம் மற்றும் கருப்பை பிரச்சனைகள். ஆண்கள் மத்தியில் ஆண்மை குறைபாடு பிரச்சனைகள் அதிகரித்து வரும் காலமாக இருக்கிறது நடப்பு தசாப்தம். கருத்தரிப்பு மூலமாக தான் ஒரு பெண் முழுமை அடைகிறாள் என சான்றோர் பெருமக்கள் கூறுகிறார்கள். பத்து மாதங்கள் வலிமிகுந்தது என்றாலும், மிகவும் அழகான காலமும் கூட. இந்த அழகான காலத்தில் வாழ்நாளில் மறக்க முடியாத சோகத்தையும் சிலர் எதிர்கொண்டிருக்கிறார். அதுதான் கருச்சிதைவு. பெண்ணாக பிறந்த யார் ஒருவரும் எதிர்கொள்ள கூடாத தருணம் இது. ஆனாலும் எதிர்பாராத விதமாக சிலருக்கு கருச்சிதைவு உண்டாகிறது. அப்படியாக தான் நீங்கள் மிக பிரபலமாக அறிந்த இந்த 10 பெண்களுக்கும் கருச்சிதைவு உண்டானது... அமீர்கனைன் மனைவி கிரண் ராவ் கான் 2009ல் கருவுற்று இருந்தார். இவர்கள் தங்களது முதல் குழந்தைக்காக மிக ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக கிரண் ராவிற்கு கருச்சிதைவு ஆனது. இதை தனது பிளாகில் எழுதி இருந்தார் அமீர்கான். 2011ல் ஐ.வி.எப் எனப்படும் செயற்கை முறையில் கருத்தரித்து கிரண் ராவ் கான் மீண்டும் கருவுற்று தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தார். நடிகையும், மாடல் அழகியுமான ப்ரூக் ஷீல்ட்ஸ் 2001ல் முதல் முறை கருவுற்ற போது கருசிதைவுக்கு ஆளானார். பிறகு இவர் ஐ.வி.எப் எனப்படும் செயற்கை முறையில் மீண்டும் கருவுற்று பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதன் பின்னர் இவர் இயற்கையாக கருவுற்று தனது இரண்டாவது குழந்தையை எந்த ஒரு சிரமும் இன்றி பெற்றெடுத்தார்.