பாலியல் உறவுக்கு மறுத்த பெண்ணை ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பர் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை வாஷி பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவருக்கு நளசோபரா பகுதியைச் சேர்ந்த ஹரிதாஸ் நிர்குடே என்ற 25 வயது இளைஞருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. ஹரிதாஸ் தனது அக்காவுடன் நளசோராவில் உள்ள ஃபிளாட்டில் வசித்து வந்துள்ளார்.