மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தஷ்வந்திற்கு அரசு சார்பில் இலவசமாக மேல்முறையீடு செய்யப்படும் என அவரது வழக்கறிஞர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். சிறுமி ஹாசினி கொலை வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மென்பொறியாளர் தஷ்வந்த் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம் தஷ்வந்திற்கு மரண தண்டனையும் 46 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட தண்டனையை கேட்டதும் சிறுமி ஹாசினியின் தந்தை பாபு நீதிமன்றத்திலேயே கதறி அழுதார். இந்த தீர்ப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.