¡Sorpréndeme!

போட்டோகிராபரை அடிக்கப் பாய்ந்த எச்.ராஜாவின் சகோதரர் சுந்தர்..வீடியோ

2018-02-09 5 Dailymotion

நீதிமன்ற வளாகத்தில் போட்டோகிராபர் ஒருவரை எச் ராஜாவின் சகோதரர் சுந்தர் அடிக்கப் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் போக்குவரத்து கழக கிளை அலுவலகத்தில் கணக்காளராக பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவின் சகோதரர் சுந்தர் பணிபுரிந்து வந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி ஓய்வுபெற இருந்த அவர், 30ஆம் தேதி சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
அலுவலகத்தில் நிதியை முறைகேடாக பயன்படுத்திய புகாரில் சுந்தர் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சுந்தர் திருச்சி நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.

அவரை படம் பிடித்த போட்டோ மற்றும் வீடியோகிராபர்களை நோக்கி ஆவேசமாக வந்த சுந்தர், திடீரென புகைப்பட கலைஞர் ஒருவரை தாக்க முயற்சி செய்து, அவரது கேமராவையும் பறிக்க முயற்சித்தார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



BJP national secretary H Raja's brother Sundar tried to attack a photo grapher in the Trichy court.