¡Sorpréndeme!

முதல்வராகும் ஆசைல்லாம் எனக்கில்லை...டிடிவி தினகரன்- வீடியோ

2018-02-08 89 Dailymotion

முதல்வராகும் ஆசை எனக்கு கிடையாது. எனக்காக தங்கள் பதவியை தியாகம் செய்த ஒருவரைத்தான் முதல்வராக தேர்வு செய்வேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்திலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும் என்று கோரி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதுதொடர்பாக பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கடையடைப்பு, உண்ணாவிரதம் என பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 10 பேரின் ஜாமீன் மனுவை மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்றுக்கொண்டதால் போராட்டத்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக கதிராமங்கலம் கிராம மக்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் இவர்கள் அய்யனார் திடலில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.



TTV Dinakaran says in Kathirmangalam and says that he never wants to become CM of TamilNadu. He will select the CM one of 18 those who sacrifice their MLA post.