¡Sorpréndeme!

நித்யானந்தா ஆசிரமத்தில் இருப்பவர்களை மீட்க நடவடிக்கை….வீடியோ

2018-02-08 243 Dailymotion

நித்யானந்தாவின் பிடதி ஆசிர்மத்தில் விருப்பமின்றி தமிழகத்தை சேர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தால் சம்மந்தப்பட்டபட்டவர்கள் புகார் கொடுத்தால் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரில் உள்ள நித்தியானந்தாவின் பிடரி ஆசிரமத்தில் இருந்த பெரியகுளத்தை சேர்ந்த மருத்துவரான மனோஜ்குமார் மற்றும் நிவேதா ஆகியோரது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மீட்டு தர வேண்டும் என்று புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இது குறித்து விசாரணை மனோஜ்குமார் மற்றும் நிவேதா ஆகியோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். அப்போது மனோஜ் மீண்டும் நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்கு செல்வதாக கூறினார். நிவேதா தன் உறவினர்களுடன் செல்வதாக கூறியதையடுத்து அவரை உறவினர்களுடன் அனுப்பிவைக்கப்பட்டார். மருத்துவர் மனோஜ்குமார் மீண்டும் ஆசிரமத்திற்கே அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் தேனி பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர்கள் யாரேனும் நித்தியானந்தாவின் ஆசிரிமத்தில் விருப்பம் இன்றி தங்க வைக்கப்பட்டிருந்தாலும் அது குறித்து புகார் கொடுத்தால் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Des : The police said that if the people of Tamilnadu were willing to stay in the custody of Nithyananda's Ptadi Aisi, the action would be taken to remedy them.